துண்டு சீட்டு இல்லாமல் என்னிடம் நேருக்கு நேர் மோத ஸ்டாலின் தயாரா? சவால் விட்ட முதல்வர் எடப்பாடி
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் இன்னும் 4 மாதங்களில் நடைபெற உள்ளன. இதனால் தற்போது தமிழக அரசியலில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன.
திமுக, அதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தற்போது களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்து வருகிறார்கள். திமுக, அதிமுக கட்சியிடம் சொற்போர் ஏற்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டும் பிரச்சார கேள்விகளுக்கு, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதிலடி கொடுத்து வருகிறார்.
அந்த வகையில் இன்று முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது, ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணனுக்கு துரோகம் செய்பவர் ஸ்டாலின். இவர் எப்படி மக்களை பாதுகாப்பார். துண்டு சீட்டு இல்லாமல் என்னிடம் கருத்து மோதலில் அவர் நேருக்கு நேர் மோத ஸ்டாலின் தயாரா என்று சவால் விடுத்துள்ளார்.
முதல்வரின் இந்த சவாலுக்கு துண்டு சீட்டு இல்லாமல் கருத்து மோதலில் மு.க. ஸ்டாலின் ஈடுபடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.