பொள்ளாச்சி வழக்கு: அருளானந்தம் கட்சியில் இருந்து நீக்கம்- அதிமுக தலைமை அதிரடி
பொள்ளாச்சி வழக்கில் அதிமுக பிரமுகர் அருளானந்தத்தை போலீசார் கைது செய்துள்ளதையடுத்து, அவரை அக்கட்சியிலிருந்து நீக்குவதாக அதிமுக தலைமை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு தன்னை கடத்தி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் ஒருவர் பொள்ளாச்சி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அந்த வழக்கை பதிவு செய்து போலீசார் 5 பேரை ஏற்கெனவே கைது செய்தனர்.
இதனையடுத்து, தற்போது அதிமுக பொள்ளாச்சி நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், அவரது கூட்டாளிகள் ஹேரன் பால், பாபு என்கிற மைக் பாபு ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் இரவோடு இரவாக கைது செய்துள்ளனர்.
இவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து, கைதான அருளானந்தத்தை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்து நீக்கப்படுவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஒபிஎஸ்சும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ்சும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.