அதிமுக எந்த காலத்திலும் உடையாது - முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கை
2021 ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் வெகு விரைவில் நெருங்கிவரும் நிலையில், தற்போதே அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன விட்டன. வெற்றிநடை போடும் தமிழகம் என அதிமுகவும், அதிமுகவை நிராகரிப்போம் என திமுகவும் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றன.
திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை உடைப்பேன் என்று பேசுகிறார் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனிடையே இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் முதலமைச்சர் பழனிசாமி சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்பொழுது அவர் பேசுகையில், திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுமென்றே திட்டமிட்டு அதிமுகவை உடைப்பேன் என்று பேசுகிறார். அதிமுக எந்த காலத்திலும் உடையாது. இங்கு இருக்கின்ற மக்கள் செல்வாக்கு உள்ளவரை அதிமுகவை உடைக்க முடியாது. இது மக்கள் ஆளுகின்ற கட்சி.
மக்கள் தான் இந்த அரசை ஆண்டுகொண்டு இருக்கிறார்கள். நான் வெறும் முதலமைச்சர் தான். இங்குள்ள அனைவரும் முதலமைச்சர் தான் என்று பேசியுள்ளார்.