ஆட்சியில் உள்ளவர்களுக்கு சொந்த புத்தி இல்லை - துரைமுருகன்

admk-election-dmk-tamilnadu
By Jon Jan 04, 2021 01:41 AM GMT
Report

கூட்டணி கட்சிகள் தனிச்சின்னம் கேட்பதில் தவறில்லைஎன துரை முருகன் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன.

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பி.கே.புரம் பகுதியில் நடைபெற்ற திமுகவின் மக்கள் கிராம சபை கூட்டத்தில் கலந்துகொண்டு செய்தியாளர்களை சதித்தார் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன்.

அப்போது பேசிய துரைமுருகன், மத்திய அரசின் விவசாயமசோதாக்களை எதிர்த்து கேரளஅரசு தீர்மானம் கொண்டுவந்தது போல, தமிழக அரசும் தீர்மானம் கொண்டு வரவேண்டும் என திமுக தலைவர் அறிக்கை கொடுத்துள்ளார்.

ஆனால் ஆட்சியில் உள்ளவர்களுக்கு சொந்த புத்தி இல்லை, நாங்கள் அறிக்கை அளித்த பின்பாவது தீர்மானம் கொண்டு வரவேண்டும் எனக் கூறினார்.

குறித்து பேசிய அழகிரி திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் தனி சின்னம் கேட்பதில் தவறில்லை, காரணம் எல்லா கட்சிகளுக்கும் தனி கொள்கை இருக்கின்றது. இதனால் திமுகவிற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறினார்.