தூத்துக்குடியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று அனல் பறக்கும் பிரச்சாரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனல் பறக்கும் பிரச்சாரத்தை இன்று தொடங்குகிறார். இன்று காலை 8.30 மணிக்கு பிரசாரத்தை அவர் தொடங்குகிறார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வில்லிசேரி பகுதியில் பருத்தி உற்பத்தியாளர்களுடன் கலந்துரையாடுகிறார்.
9.15 மணிக்கு கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 10.15 மணிக்கு கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் தீப்பெட்டி தொழிற்சாலை கூட்டுறவு சங்க தலைவர்களுடன் கலந்துரையாடுகிறார்.
11 மணிக்கு கோவில்பட்டி பேருந்து நிலையத்தில் மக்களுடன் கலந்துரையாடுகிறார். பிறகு 1 மணியளவில் விளாத்திகுளம் தீப்பெட்டி தொழிலார்களை சந்திக்கிறார்.
அதன் பின் இன்றைய பிரச்சாரத்தை தூத்துக்குடியில் முடித்த கையோடு விமானம் மூலமாக சென்னை திரும்புகிறார்.