திமுகவினரே போதைப் பொருள்களைக் கடத்துகின்றனர் - கொந்தளித்த ஈபிஎஸ்!
திமுகவினரே போதைப் பொருள்களைக் கடத்துவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
பொதுக்கூட்டம்
சேலம், தாதகாப்பட்டியில் நடந்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள் விழாவில் அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கலந்துக்கொண்டு ஜெயலலிதா படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதில் உரையாற்றிய அவர், அதிமுக ஆட்சியில் மக்களுக்கான பல திட்டங்களை கொண்டு வந்தது. ஏழை மக்கள் சிகிச்சை பெற தமிழகம் முழுவதும் 2,000 மினி கிளினிக் கொண்டு வந்தோம். ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக, அத்திட்டத்தை ரத்து செய்துவிட்டனர்.
சேலத்தில் மட்டும் ரூ.1,000 கோடியில் சீர்மிகு நகரத் திட்டம், மேட்டூர் உபரி நீர் திட்டம், ஆசியாவில் பெரிய கால்நடை ஆராய்ச்சிப் பூங்கா என பல திட்டங்களை கொண்டு வந்தோம். ஆனால், சேலம் மாவட்டத்துக்கு திமுக எந்த திட்டமும் கொண்டு வரவில்லை.
அதிரடி விமர்சனம்
தமிழகத்தில் திமுக கட்சியினரே போதைப்பொருள் விற்பனை செய்வதால் தான் அதனை தடுத்து நிறுத்த போலீசாரால் முடியவில்லை. கடந்த 3 ஆண்டு காலத்தில் எந்தவொறு திட்டத்தையும் திமுக நிறைவேற்றவில்லை.
ஆதிமுக ஆட்சிகால திட்டங்களை ஸ்டிக்கர் ஒட்டி திறந்துவைத்துள்ளனர், வேறு எந்த திட்டத்தையும் அவர்கள் நிறைவேற்றவில்லை. மேலும், மத்திய அரசிடம் போதிய நிவாரணம் பெற சரியான அழுத்தம் குடுத்திருந்தால் தமிழ்நாட்டிற்கு கிடைத்திருக்கும், திமுகவின் எம்பிகளோடு எதிர்க்கட்சிகளும் குறல் கொடுத்திருக்க வேண்டும். ஆனால், அதை செய்யவில்லை.
திமுக மீது மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதனை திசைத்திருப்பவே மத்திய அரசு மேல் புகார் கூறுகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.