பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவலம்..வெட்கக்கேடான நிலை -கொந்தளித்த ஈபிஎஸ்!

M K Stalin Tamil nadu DMK Edappadi K. Palaniswami
By Vidhya Senthil Jan 19, 2025 03:00 PM GMT
Report

திமுக ஆட்சியில் பெண் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லாத அவல நிலை உள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.

திமுக ஆட்சி

விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதைத் தாண்டி, தற்போது பெண் காவலர்களுக்கே பாதுகாப்பு இல்லாத அவலமும் தொடர்கிறது.

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

நேற்று ஒரே நாளில் சென்னை தாம்பரம் ஆணையரக காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பணிபுரியும் பெண் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 8 பேர் நகைப் பறிப்பு சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன.

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை விரட்ட தமிழக வாக்காளர்கள் காத்திருக்கின்றனர் - சவால் விட்ட ஈபிஎஸ்!

தமிழகத்தில் குடும்ப ஆட்சியை விரட்ட தமிழக வாக்காளர்கள் காத்திருக்கின்றனர் - சவால் விட்ட ஈபிஎஸ்!

ஒரு பெண் உதவி ஆய்வாளர், இரண்டு மளிகைக் கடை மற்றும் உணவகத்தில் இருந்த மகளிர்கள், குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய், இருசக்கர வாகனத்தில் பயணித்தோர் என்று அனைவரும் தங்களது நகைகளை பறிகொடுத்திருப்பது, இந்த ஆட்சியாளர்களின் கையாலாகாத்தனத்தைக் காட்டுகிறது.

தமிழ்நாட்டில் காவலர் உட்பட யாரும் பாதுகாப்பாக நடமாட முடியாத சூழ்நிலை உள்ளது என்பது வெட்கக்கேடான நிலை; இந்த நிலைக்கு காரணமான நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் அரசு தலைகுனிய வேண்டும்.

பாதுகாப்பு இல்லை

நகைப் பறிப்பு போன்ற குற்றங்கள் சர்வசாதாரணமாக நடக்கும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து போனதற்கு காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் திரு. ஸ்டாலின் அவர்களே முழு பொறுப்பு ஏற்கவேண்டும் .

பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை

நகைப் பறிப்பில் ஈடுபட்டுள்ள குற்றவாளிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், சுய விளம்பரங்களில் செலுத்தும் அதே கவனத்தை சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் செலுத்துமாறு எடப்பாடி வழியுறுத்தி உள்ளார்.