தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் - ஈபிஎஸ் ஆவேசம்!

Tamil nadu ADMK Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Jiyath Apr 10, 2024 02:30 PM GMT
Report

தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி

பொள்ளாச்சி மக்களவை தொகுதியில் அதிமுக சார்பில் கார்த்திகேயன் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று பொள்ளாச்சியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார்.

தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் - ஈபிஎஸ் ஆவேசம்! | Admk Edappadi Palanisami Speech In Pollachi

அப்போது அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர் "பொள்ளாச்சியில் இன்று நடைபெறுவது தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் அல்ல, வெற்றி விழா கூட்டம் போல் காட்சியளிக்கிறது. அ.தி.மு.க.வை உடைக்க ஸ்டாலின் செய்த முயற்சிகள் அனைத்தும் தொண்டர்களால் முறியடிக்கப்பட்டன.

ஓட ஓட விரட்டுவோம்

எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா அகிய இரு தலைவர்களும் தமிழக மக்களுக்காக இறைவன் கொடுத்த கொடை ஆவர். அவர்கள் இருவரும் மக்களுக்காகவே வாழ்ந்தார்கள். அவர்கள் அ.தி.மு.க.வை கட்டிக் காத்து நம்மிடம் கொடுத்துவிட்டுச் சென்றுள்ளார்கள். நாம் தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம்.

தேர்தல் என்ற இந்த போரில் எதிரிகளை ஓட ஓட விரட்டுவோம் - ஈபிஎஸ் ஆவேசம்! | Admk Edappadi Palanisami Speech In Pollachi

தமிழகத்தை 30 ஆண்டுகாலம் அ.தி.மு.க. ஆட்சி செய்துள்ளது. தமிழகத்தை இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக கொண்டு வருவதற்கு அ.தி.மு.க. அரசு பாடுபட்டது. இதனால் தமிழகம் இன்று அனைத்து துறைகளிலும் அகில இந்திய அளவில் உயர்ந்து நிற்கிறது" என்று பேசியுள்ளார்.