சட்டமன்ற தேர்தலில் உதயநிதி போட்டியிடுகிறாரா? ஸ்டாலின் சொன்ன பதில்
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் பிரச்சார பணிகளில் தீவிரமாக களமிறங்கியுள்ளன. ’வெற்றிநடை போடும் தமிழகம்’ என்கிற முழக்கத்துடன் அதிமுக தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது.
விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ என்கிற முழக்கத்துடன் தமிழகம் முழுவதும் கிராமசபை கூட்டங்கள் மூலமாக மக்களிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் திமுக இளைஞரனி தலைவராக உள்ள உதயநிதி ஸ்டாலினும் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள நிலையில் சட்டமன்ற தொகுதியிலும் போட்டியிடுவார் எனப் பேசிக் கொள்ளப்பட்டது.
இதுகுறித்து பேசியுள்ள மு.க.ஸ்டாலின் 'திமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை. நானே அப்படிதான் கட்சியில் வாய்ப்பை பெற்றேன். திமுகவை குறை சொல்பவர்கள்தான் குடும்ப அரசியல், உதயநிதிக்கு முன்னுரிமை என்று பேசி வருகின்றனர்' என்று கூறியுள்ளார்.