அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளும் கூட்டணி பேச அழைத்தன - கமல்ஹாசன் வெளிப்படை
political
stalin
edappadi
By Jon
சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளிலிருந்தும் கூட்டணி பேச அழைப்பு வந்ததாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் நான்காம் ஆண்டு தொடக்க விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய கமல், “கூட்டணி தொடர்பாக பேச்சுக்கள் வந்தன. ஆனால் தூது வருவதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது தலைமையிடமிருந்து அழைப்பு வர வேண்டும்” எனத் தெரிவித்தார். மேலும் ரஜினிகாந்திடம் ஆதரவு கேட்டீர்களா என்கிற கேள்விக்கு, “கூட்டணி பற்றி பேசலாம், ஆதரவு குரல் என்பது ஒருவர் தாமாக முன்வந்து தர வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும் பல கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார்.