இபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

ADMK Edappadi K. Palaniswami
By Irumporai May 17, 2023 03:20 AM GMT
Report

சென்னையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

 அதிமுக பொதுக்கூட்டம்

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார். அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் செயலாளர் கூட்டம் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது.

இபிஎஸ் தலைமையில் இன்று மாலை அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் | Admk Dmeeting This Evening Under The Leadership

பொதுக்குழுவுக்கு அங்கீகாரம்

நாடாளுமன்ற தேர்தல், உறுப்பினர் சேர்க்கை, மதுரை மாநாடு மற்றும் கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தலைமை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருந்த நிலையில், தற்போது அதிமுக பொதுக்குழுவுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதிமுக பொதுக்குழுவில் அக்கட்சியின் விதிமுறைகளை மாற்றம் செய்ததை ஏற்றுக்கொண்டது இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.