ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் ; அதிமுக இன்று முதல் விருப்ப மனு விநியோகம்
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அதிமுக விருப்ப மனு விநியோகம்
இந்த நிலையில் கடந்த 4ம் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா காலமானார். இதனிடையே இந்த தொகுதிக்கு பிப்ரவரி 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் அதிமுக இன்று முதல் விருப்ப மனு விநியோகம் செய்வதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் 27.2.2023 அன்று நடைபெற உள்ளதை முன்னிட்டு,
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வேட்பாளராக போட்டியிட விரும்புகின்ற கழக உடன்பிறப்புகள், தலைமைக் கழகம், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் 23.01.2023 திங்கட் கிழமை முதல் 26.01.2023 வியாழக்கிழமை வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை, விண்ணப்பக் கட்டணத் தொகையாக 15,000 (ரூபாய் பதினைந்தாயிரம் மட்டும்) ரூபாய் செலுத்தி, விருப்ப மனு விண்ணப்பப் படிவங்களைப் பெற்று, அதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் தெளிவாகப் பூர்த்தி செய்து உடனடியாக வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
மகிந்தவின் மனைவியின் படத்தை பிறேம் போடவும் அரசு பணம் செலவீடு :அம்பலப்படுத்திய நீதி அமைச்சர் IBC Tamil