சசிகலா, தினகரனை ஒருபோதும் கட்சியில் இணைக்க முடியாது - முதல்வர் அதிரடி
சட்டமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறது. தமிழக பிரதான அரசியல் கட்சிகளான திமுக, அதிமுக தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கி மேற்கொண்டு வருகின்றன. அதே சமயம் சசிகலா சிறை தண்டனை முடிந்து தமிழகம் திரும்பியுள்ளதும் பரபரப்பாக பேசப்படுகிறது.
சசிகலா அதிமுகவை கைப்பற்றுவாரா, அதிமுக - அமமுக இணைப்பு சாத்தியப்படுமா எனப் பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தபோது சசிகலா அதிமுகவில் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை எனத் தெரிவித்திருந்தார். ஆனால் பலரும் அதிமுக - அமமுக இணைப்பை பற்றி பரவலாக பேசி வருகின்றனர்.
பொது எதிரியான திமுகவை எதிர்கொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை பலரும் வெளிப்படையாக தெரிவித்து வருகின்றனர்.
தற்போது முதல்வர் எடப்பாடி மீண்டும், “ஒருபோதும் அவர்களை கட்சியில் இணைக்க முடியாது. ஒரு குடும்பம் ஆள்வதற்கு அதிமுக ஒருபோதும் தலைவணங்காது. அதிமுகவை கைப்பற்ற சதித்திட்டம் நடக்கிறது” எனக் கூறியுள்ளார்.