தேர்தல் நியாயமாக நடைபெறாது..ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணித்த அதிமுக!
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இடைத்தேர்தலை
தமிழ் நாட்டில் 2021ஆம் ஆண்டுக்கான சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா தேர்வு செய்யப்பட்டு வெற்றிபெற்றார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த போது திடீரென மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.
அதன்பிறகு மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு 2023ஆம் ஆண்டு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் திருமகன் ஈவெரா-வின் தந்தையான ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றிபெற்று மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால் அவரும் உடல்நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.இந்த நிலையில் மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தலை அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் திமுக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை வேட்பாளர் யார் என்ற கேள்வி எழுந்தது.
அதிமுக
இந்த சூழலில் அதிமுக கட்சித் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் குறித்து விவாதிக்கப்பட்டது.அப்போது அதிமுக இந்த கூட்டத்தில் ஈரோடு கிழக்கு தேர்தலைப் புறக்கணிக்க அதிமுக முடிவு செய்துள்ளது.
அமைச்சர்களும், திமுகவினரும் ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவார்கள் என்பதால் புறக்கணிக்கப்படுகிறது. மேலும் மக்களைச் சுதந்திரமாக வாக்களிக்க விடமாட்டார்கள், தேர்தல் நியாயமாக நடைபெறாது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.