“அதுல ஒண்ணும் இல்ல ... தூக்கி போடு” - வெள்ளை அறிக்கையை கலாய்த்த அதிமுக
திமுக அரசு வெளியிட்ட வெள்ளை அறிக்கையை கலாய்த்து அதிமுக அரசு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியின் நிதிநிலைமை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வெளியிட்டுள்ளார்.
#வெள்ளைஅறிக்கை pic.twitter.com/3k7Qu542im
— AIADMK (@AIADMKOfficial) August 9, 2021
இதில் அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறை 1.50 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. 2011-16 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் வருவாய் பற்றாக்குறையாக ரூ.17ஆயிரம் கோடியாக இருந்தது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் ரூ.2,63,976 கடன் சுமை உள்ளது.
5 ஆண்டுகளில் எந்த மாநிலத்திலும் இந்த அளவுக்கு வருவாய் பற்றாக்குறை இல்லை என பழனிவேல் தியாகராஜன் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். இதனை அதிமுகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளம் வெள்ளை அறிக்கையை கேலி செய்து ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர்.