அ.தி.மு.க. மாநாடு - கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!
அதிமுக மாநாட்டை கட்சி கொடியேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக மாநாடு
அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்ற பின் கட்சியின் மாநில அளவிலான மாநாடு மதுரையில் இன்று நடக்கிறது. இதற்காக மதுரை வலையங்குளத்தில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாநாட்டில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
கட்சி கொடி
இந்நிலையில் இந்த மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றி தொடங்கி வைத்தார். அப்போது ஹெலிகாப்டரில் இருந்து 600 கிலோ பூக்கள் தூவப்பட்டன.

அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுக கட்சி தொடங்கி 51ம் ஆண்டினை குறிக்கும் விதமாக ௫௧ அடிஉயர கொடிக்கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். 30000 தொண்டர்கள் அணிவகுத்து வந்து எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதை அளித்தனர்.
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan