மக்கள் குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? தவெகவிற்கு அதிமுக கண்டனம்

ADMK Thamizhaga Vetri Kazhagam
By Karthikraja Nov 09, 2026 05:19 AM GMT
Report

admk condemns thuraiyur tvk mla attacked person: வாக்களித்த மக்கள் குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? என தவெகவிற்கு அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

அதிமுக கண்டனம்

துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினரும், துணை சபாநாயகருமான ரவிசங்கரிடம் தொகுதி பிரச்சினை குறித்து முறையிட வந்தவரை தாக்கியதாக வீடியோ ஒன்றை அதிமுக தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. 

மக்கள் குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? தவெகவிற்கு அதிமுக கண்டனம் | Admk Condemns Thuraiyur Tvk Mla Attacked Person

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள பதிவில், "பத்து நாளா தண்ணி வரல அப்டின்னு தன்னோட பகுதியில் உள்ள குறைகளை சொல்ல வந்த கார்த்தி என்பவரை கண்மூடித்தனமாக தாக்கிய துறையூர் தவெக சட்டமன்ற உறுப்பினர் ரவிசங்கர்.

ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினரும் அந்த தொகுதிக்கான, அந்த தொகுதி மக்களுக்கான எல்லைக் காப்பாளர் அப்டின்னு வசனம் பேசிய ரீல் முதல்வர் விஜய் அவர்களே!

உங்கள் கட்சியின் துறையூர் "எல்லைக் காப்பாளர்" மக்களைக் காப்பாற்றும் லட்சணத்தைப் பார்த்தீர்களா?

உங்களுக்கு வாக்களித்த சாமானிய மக்கள் அவங்களோட குறைகளை சொல்ல வந்தா அடிப்பீங்களா? மேலும் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்! ஒரு சட்டமன்ற உறுப்பினர் தன்னுடைய தொகுதி மக்களிடம் பயன்படுத்தக் கூடிய வார்த்தைகளா இவை! 

இப்படி மக்களை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய துறையூர் ஆச்சரியக்குறி சட்டமன்ற உறுப்பினர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

இல்லை இதனையும் வாய் மூடி மௌனியாக வேடிக்கைதான் பார்க்கப் போகிறீர்களா?" என தெரிவித்துள்ளது.