“அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும்” - எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
eps
tamil nadu
close tasmac
eps urges
dmk government
By Swetha Subash
கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டுமென எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு நிலைப்பாடு, வந்த பின்பு மற்றொரு நிலைப்பாடு என்று திமுக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
எனவே, இந்த விடியா திமுக அரசு மக்களின் இன்னுயிரோடு விளையாடாமல், தன்னுடைய இரட்டை வேட நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டுமெனவும்,
கொரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் வரும் வரை, தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்களை உடனடியாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.