சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி
By Fathima
எடப்பாடி, சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில் அதிமுக ஆதரவு வேட்பாளர் சாந்தி மணிவண்ணன் வெற்றி பெற்றார்.
எடப்பாடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட, சித்தூர் ஊராட்சி மன்ற உறுப்பினருக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி திங்கள் அன்று காலை தொடங்கியது.
இதில் அதிமுக ஆதரவாளராக போட்டியிட்ட சாந்தி மணிவண்ணன் - 387 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக அதரவு வேட்பாளரான கோவிந்தம்மாள் நாகராஜ்-304 வாக்குகளைப் பெற்றிருந்தார்
83 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக ஆதரவு பெற்ற சாந்தி மணிவண்ணன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.