சமூக இடைவெளியின்றி கூட்டத்தோடு சென்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினரால் பரபரப்பு
வாணியம்பாடியில் புதியதாக தேர்வு செய்யபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூட்டத்துடன் ஊர்வலமாக சென்றது. பொதுமக்களிடையே பரப்பரப்பு ஏற்ப்படுத்தியது .
அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கு நடனம் ஆடி உற்சாக வரவேற்பு அளித்த அதிமுக தொண்டர்கள். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளராக செந்தில்குமார் போட்டியிட்டு அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக கூட்டணி வேட்பாளர் முகமது நயீம் அவர்களை 4904 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
இதனையடுத்து இன்று கழக நிர்வாகிகளுடன் சென்று ஆலங்காயம் பேரூராட்சியில் பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி அலுவலகம் எதிரில் உள்ள எம்ஜிஆர், அண்ணா, காந்தி அம்பேத்கர் சிலைகளுக்கு வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்குள்ள நாகம்மன் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்தனர். அப்போது சட்டமன்ற உறுப்பினருக்கு அதிமுக தொண்டர் நடனம் ஆடியும், பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். கொரானா பாதிப்பு அதிகரித்து உள்ளத்தால் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்ற நிலையில் தற்போது இதுபோன்ற சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஊர்வலம் சென்றது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.