விஜய்யை கூவி கூவி அழைச்சாங்க; விரக்தியின் உச்சத்தில் அதிமுக - டிடிவி தினகரன்
விரக்தியின் உச்சத்தில் அதிமுகவினர் இருப்பதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
விரக்தியில் அதிமுக
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், “விஜய்யை வா... வா... என கூவி கூவி அழைத்தார்கள். தனியாக நின்றால் திமுக அழிந்துவிடும் என பயமுறுத்தினார்கள்.

ஆனால் அவர் தெளிவான நிலைப்பாட்டை எடுத்து அறிவித்ததும் விரக்தியின் உச்சத்தில் அதிமுகவினர் விமர்சித்து வருகின்றனர். இனி திமுகவை விட அதிமுகவினர் தான், தவெகவை அதிகம் விமர்சிப்பார்கள்.
டிடிவி விமர்சனம்
2026 தேர்தலில் விஜய் எங்களுடன் கூட்டணிக்கு வரவில்லை என்றால் திமுக தமிழக வெற்றிக் கழகத்தை அழித்துவிடும் என்றெல்லாம் பயமுறுத்தி பார்த்தார்கள் ச்சீ.. ச்சீ இந்த பழம் புளிக்கும் என்று விரக்தியில் சென்று விட்டார்கள்.

துரோகம் என்றுமே தன்னுடைய வேலையை காட்டும். விஜய்யை திமுகவைவிட அதிகமாக அதிமுகதான் தாக்கப்போகிறது. மனநலம் குன்றியவர் போல ஆர்.பி உதயகுமார் பேசி வருகிறார். சுயநலம் கொண்டவர்களால் அதிமுக அழிந்து வருகிறது.
கூவி கூவி அழைக்கும் கூட்டணிக்கு நிலையில்தான் அதிமுக உள்ளது. எடப்பாடி பழனிசாமியை சம்பந்தப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் கொடநாடு சம்பவம் தொடர்பாக பேசவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.