90 சதவிகித அதிமுக தொண்டர்கள் தவெக-வில் இணைவார்கள்
90 சதவிகித அதிமுக நிர்வாகிகள் தவெக வர விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
பனையூர் அலுவலகத்தில் நடந்த மாற்றுக்கட்சியினர் இணைப்பு விழா நடந்தது. இதில் அண்ணா தொழிற்சங்க தலைவர் கமலக்கண்ணன் முன்னிலையில் 100க்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைந்தனர்.
அப்போது பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் வந்த போது கேலி கிண்டல் செய்தனர், அவருடைய அதிர்ஷ்டம் இன்று எம்ஜிஆர், ஜெயலலிதாவை தொடர்ந்து விஜய் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்.
மதச்சார்பற்ற ஒட்டுமொத்த கூட்டணியை உருவாக்கியவர் எங்கள் தலைவர், நேர்மையுடன் பணியாற்றும் அமைச்சரவையை உருவாக்கி உள்ளார், ஊழலை ஒழித்து வரலாற்றை உருவாக்கியுள்ளார்.
தவெக ஆட்சியில் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது, இதை உணர்ந்து 90 சதவிகித அதிமுக தொண்டர்கள் தவெகவுடன் கைகோர்க்க தயாராகிவிட்டனர், இன்னும் ஒரு மாதத்தில் தவெகவில் இணைவார்கள் என தெரிவித்தார்.