அதிமுக தலைமையேற்க சசிகலாவுக்கு அழைப்பு - விருதுநகரில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
விருதுநகரில் சசிகலாவை அதிமுக தலைமை ஏற்க வருமாறு போஸ்டர் ஒட்டிப்பட்டதால் பரபரப்பு.
விருதுநகர் அருகே செந்நெல்குடி பகுதியில் சசிகலாவை அதிமுகவின் தலைமை ஏற்று ஒருங்கிணைக்க வருமாறு அழைப்பு விடுத்து போஸ்டர் ஒட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்படுகிறது.
ஏற்கனவே அஇஅதிமுக, அமமுக என இரண்டாக பிளவுபட்டுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டம் அருகில் உள்ள செந்நெல்குடி கிராமத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதில் அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் தியாக தலைவி சசிகலா அவர்களே அதிமுக தலைமை ஏற்க வருக. ராணுவக் கட்டுப்பாட்டோடு இருந்த கழகத்தின் இன்றைய நிலைமை பாருங்கள் தாயே.

போர் புரிய போர்ப்படை இருப்பினும் போர்ப்படை தளபதி மௌனம் காப்பது ஏனோ. கழகத்தை காக்கும் காவல் தெய்வமே வாருங்கள், கழகம் மட்டுமல்லாது தமிழ்நாட்டு மக்கள் நலனுக்காகவும் போராடுவோம் உங்கள் தலைமையில் உங்கள் தலைமை ஏற்க கடைக்கோடி தொண்டர்களோடு நாங்களும் காத்திருக்கிறோம் என்று விருதுநகர் மாவட்ட அஇஅதிமுக என்று அந்த பகுதியில் போஸ்டர் ஒட்டியதால் பரபரப்பு காணப்படுகிறது,