அதிமுக - பாஜக இன்று பேச்சுவார்த்தை

seeman dmk congress
By Jon Mar 02, 2021 02:22 PM GMT
Report

சட்டப்பேரவை தேர்தலில் தொகுதியில் பங்கீடு தொடர்பாக அதிமுக பாஜக இடையே பேச்சுவார்த்தை இன்று நடைபெறுகிறது. சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையையும் தொகுதி பங்கீடு குறித்தும் பேச தொடங்கிவிட்டனர்.

திமுக தனது கூட்டணி கட்சியான காங்கிரஸுடன் முதல்கட்ட பேச்சுவார்த்தையை முடித்துவிட்டது. இதைத்தொடர்ந்து சமத்துவமக்கள் கட்சியும் ஐஜேகேவும் இந்த சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. இந்த நிலையில் அதிமுக பாஜக இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று காலை 8.30 மணிக்கு நடைபெற உள்ளது.

இதற்காக பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர்கள் கிஷன் ரெட்டி, சி.டி.ரவி ஆகியோர் முதல்வரை சந்தித்து பேசுகின்றனர். இதைத்தொடர்ந்து பாஜக குழு துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான பன்னீர்செல்வத்தையும் சந்தித்து பேசுகின்றனர்.