அதிமுக - பாஜக கூட்டணி உறுதி: பாஜக தலைவர் ஜே.பி நட்டா அறிவிப்பு
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் முழு வீச்சில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. திமுக- காங்கிரஸ் ஒரு கூட்டணியிலும், பாஜக - அதிமுக ஒரு கூட்டணியிலும் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் கூட்டணி தொடர்பாக இரண்டு தரப்பிலும் பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடருமா என்று கூட பலரும் கேள்வி எழுப்பியிருந்தனர்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி தொடரும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் பாஜக - அதிமுக கூட்டணி தொடர்பாக பல கேள்விகள் நிலவி வந்தன.
நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் இருந்து பின்வாங்கிய பிறகு பாஜக அதிமுக உடன் தான் தொடரும் எனப் பலரும் தெரிவித்திருந்தனர்.
ஆனால் தற்போது அதிமுக - பாஜக கூட்டணி உறுதியாகியுள்ளது. தமிழகம் வந்துள்ள பாஜக தலைவர் ஜே.பி.நட்டா இதனை உறுதிபடுத்தியுள்ளார்.