பொதுக்குழு தகவல் - மதுரை மாநாடு செலவு டு தற்போது அதிமுகவின் பேங்க் balance எவ்வளவு..?

ADMK AIADMK Edappadi K. Palaniswami
By Karthick Dec 27, 2023 12:34 AM GMT
Report

நடைபெற்று முடிந்த அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் சார்பில் நடத்தப்பட்ட மதுரை மாநாட்டின் செலவு எவ்வளவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக்குழு

கட்சியின் அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நேற்று அதிமுகவின் செயற்குழு பொதுக்குழு கூட்டம் நடைபெற்று முடிந்தது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட இந்த கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளும் அரசிற்கு எதிராக பல விமர்சனங்களை முன்வைத்து பேசினார்.

admk-bank-balance-and-madurai-maanaadu-cost

இந்த கூட்டத்தில் மதுரை மாநாட்டிற்கு செலவு செய்யப்பட்ட பணம் குறித்தும் நிர்வாகிகளிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன் அறிவித்தார்.

பசியை தூண்டும் அறுசுவை விருந்து - அதிமுக பொதுக்குழு கூட்ட உணவு பட்டியல்..??

பசியை தூண்டும் அறுசுவை விருந்து - அதிமுக பொதுக்குழு கூட்ட உணவு பட்டியல்..??

மாநாடு செலவு

அதன்படி.கட்சியின் வங்கிக்கணக்கில் நிலைய வைப்பு ரூ.164.70 கோடி என்றும் கட்சியின் வளர்ச்சி நிதியாக ரூ.77.10 கோடி என மொத்தம் ரூ.261.80 கோடி வைப்பு நிதி உள்ளது என்றார் திண்டுக்கல் ஸ்ரீனிவாசன்.

admk-bank-balance-and-madurai-maanaadu-cost

மேலும், கட்சியின் உறுப்பினர்கள் சேர்க்கை மூலம் ரூ.20 கோடி பெறப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், கட்சி சார்பில் மிகவும் பிரமாண்டமாக நடத்தப்பட்ட மதுரை மாநாட்டிற்கு செலவு செய்த தொகை ரூ.2 கோடியே 24 லட்சம் என்று தெரிவித்து மாநாட்டில் பெறப்பட்ட நிதி ரூ.2 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம் என்றும் அறிவித்தார்.