Pablo Escobar மிஞ்சும் ஜாபர் சாதிக் போதை கதை - சமூகவலைத்தளங்களில் பரபரவைக்கும் அதிமுக..!

ADMK Edappadi K. Palaniswami Lok Sabha Election 2024
By Karthick Apr 07, 2024 01:06 PM GMT
Report

மாநில ஆளும் திமுக அரசை கண்டித்து அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் பிரச்சார வீடியோக்கள் சமூகவலைத்தளங்களின் கவனத்தை பெற்றுள்ளது.

நீட் ரகசியம்

தமிழகத்தில் பெரும் அரசியல் விவகாரமானது நீட் தேர்வு. இந்த தேர்வினால் உயிரிழப்புகளும் ஏற்பட்டது. இதனை முக்கிய தேர்தல் வாக்குறுதியாக வைத்த திமுக 2021-ஆம் ஆண்டின் சட்டமன்ற தேர்தலின் போது, நீட் தேர்வை ஒழிக்கும் ரகசியம் எங்களுக்கு தெரியும் என கூறியது.

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா..! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா..! எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்


தற்போது 3 ஆண்டுகால ஆட்சியை முடிக்கும் திமுக, மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் நீட் தேர்வு விலக்கு வரும் என தெரிவித்துள்ளது. இதனை எதிர்க்கட்சியான அதிமுக கடுமையாக விமர்சித்து வருகின்றது.

கையெழுத்து இயக்கம் நடத்தினீர்களா..?

அந்த நீட் தேர்வு ரகசியம் என்ன தான் கேள்வியை அதிமுக இந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு முன்வைத்துள்ளது. போதைக்கு அடிமையாகும் தமிழகம் திமுகவின் அயலக அணி நிர்வாகி ரூ.2000 கோடி போதை பொருள் கடத்தல் வழக்கில் கைதானது பெரும் அதிர்ச்சியை மக்களிடம் ஏற்படுத்தியிருக்கின்றது.

இது குறித்து எதிர்க்கட்சி போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தின. திமுகவிடம் மேலிடத்திடம் நெருக்கம் கட்டியவராக இருந்த ஜாபர் சாதிக் இந்த வழக்கில் கைதானது தொடர்ந்து அதிமுக தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றது.

admk-awareness-videos-gets-social-media-notice

ஜாபர் சாதிக் போன்றவர்களால் நம் பிள்ளைகளின் எதிர்காலத்தை கேள்விக்குரியாக்கியவர்களை மீண்டும் இந்த தேர்தலில் வெல்லவைக்க போகிறீர்களா..? என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றது அதிமுக.

போதை மருந்து பழக்கத்திற்கு அடிமையான பலரும் தங்களின் உறவினர்களையும் காயப்படுத்துவது போன்ற சம்பவங்களும் தமிழகத்தில் ஆங்காங்கே நடந்து வருவது அவ்வப்போது செய்திகளில் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனை கேள்வியாக்கியுள்ள அதிமுக, போதைக்கிடங்காய் தமிழ்நாட்டை மாற்றியவர்களை ஒற்றைவிரலால் ஓங்கிஅடிபோம் என்ற முழக்கத்தை தமிழக மக்களிடம் முன்வைத்துள்ளது.