தனுஷ் பின்னணியில் பாஜகவா? முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

Dhanush ADMK BJP
By Karthikraja Oct 26, 2026 09:36 AM GMT
Report

admk asks whats wrong if bjp behind dhanush: தனுஷ் பின்னணியில் பாஜக உள்ளதாக கூறப்பட்ட நிலையில், அது குறித்து அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கமளித்துள்ளார்.

தனுஷ் அரசியல் வருகை

நடிகர் தனுஷ் அரசியலுக்கு வர உள்ளதாக சமீப காலமாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. 

தனுஷ் பின்னணியில் பாஜகவா? முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் | Admk Asks Whats Wrong If Bjp Behind Dhanush

ரசிகர்கள் மன்றத்தை சட்டமன்ற தொகுதி வாரியாக பிரித்ததோடு, நற்பணி இயக்கமாக மாற்றினார். டெல்லியில் கடந்த வாரம் தங்கி முக்கிய பிரமுகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

நேற்று சென்னையில், மகளிர் அணி நிர்வாகிகள் சுமார் 5,000 பேரை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தாமரை சின்னம் பொறிக்கப்பட்ட வெள்ளி காமாட்சி விளக்கு மகளிர் அணி நிர்வாகிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பின்னணியில் பாஜக?

பொதுக்கூட்டம் ஒன்றில் தனுஷின் பெயரை குறிப்பிடாமல் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, "புதிய புதிய நடிகர் டெல்லியில் போய் உக்கார்ந்து இருக்கிறார்கள். அதெல்லாம் ஒன்றும் நடக்காது. எல்லாத்தையும் பார்த்தாச்சு. யார் வேண்டுமானாலும் வரட்டும். எங்கிருந்து வேண்டுமானாலும் வரட்டும்" என கூறினார். 

தனுஷ் பின்னணியில் பாஜகவா? முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் | Admk Asks Whats Wrong If Bjp Behind Dhanush

காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் மாணிக்கம் தாகூர், "சி பிளானின் படி ஒரு நடிகரை தயார் செய்து வருகிறது பாஜக. இது எல்லாமே தமிழகத்தில் அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தும் ஆர்எஸ்எஸ்சின் திட்டம் தான். டெல்லியில் அமித் ஷாவிடமிருந்து உருவாகும் ‘ஆபரேஷன் டி’ திட்டம் தான் நடிகரின் அரசியல் திட்டம்" என பேசியுள்ளார்.

திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்

இந்நிலையில், தனுஷின் பின்னணியில் பாஜக உள்ளதா என கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், "தனுஷ் வருகையால் அவரை மக்கள் முதல்வர் ஆகிவிடுவார்கள் என ஆளும் தவெக அச்சமடைந்துள்ளது. 

தனுஷ் பின்னணியில் பாஜகவா? முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம் | Admk Asks Whats Wrong If Bjp Behind Dhanush

பாஜக பின்னணியில் இருந்தால் என்ன தவறு? நாங்களே அவர்களுடன் தானே கூட்டணி வைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளார்.