Thursday, Jun 19, 2025

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் இல்லை - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

Tamil nadu ADMK DMDK
By Karthikraja 18 days ago
Report

 அதிமுக மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மாநிலங்களவை தேர்தல்

தமிழ்நாடு சார்பில் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ள வைகோ, அன்புமணி, பி.வில்சன், எம்.சண்முகம், என்.சந்திரசேகரன், எம்.முகமது அப்துல்லா ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூலை 27 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் இல்லை - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக | Admk Announced Rajya Sabha Candidates No To Dmdk

இந்த 6 மாநிலங்களவை பதவிகளுக்கான தேர்தல், வரும் ஜூன் 19ஆம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

திமுக 4 எம்பிக்களை தேர்வு செய்வதற்கு வாய்ப்புள்ளதால் திமுக சார்பில், மக்கள் நீதி மைய்ய தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகிய 4 பேரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

அதிமுக வேட்பாளர்கள்

தற்போது மீதமுள்ள 2 இடங்களுக்கும் அதிமுக வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

தேமுதிகவிற்கு மாநிலங்களவை சீட் இல்லை - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக | Admk Announced Rajya Sabha Candidates No To Dmdk

அதிமுக சட்டத்துறை செயலாளர் இன்பத்துரை மற்றும் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் ம.தனபால் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

தேமுதிகவிற்கு 2026 ஆம் ஆண்டு ஒரு ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிமுக கூட்டணியில் தேமுதிக தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.