மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

ADMK Election
By Karthikraja Sep 10, 2026 01:34 PM GMT
Report

admk announced candidates for dharapuram and madurantakam by election: தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அதிமுக அறிவித்துள்ளது.

இடைத்தேர்தலுக்கு வேட்பாளர்களை அறிவித்த அதிமுக

மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கும் அக்டோபர் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல் - வேட்பாளர்களை அறிவித்த அதிமுக | Admk Announced Candidates For By Election

இதில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை அதிமுக அறிவித்துள்ளது.

மதுராந்தகம் தொகுதியில் கனிதா சம்பத் மற்றும் தாராபுரம் தொகுதியில் பானுமதியை வேட்பாளர்களாக அறிவித்துள்ளது அதிமுக. 

கனிதா சம்பத் 2011 சட்டமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். 

திமுக, தவெகவை தொடர்ந்து அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 13 ஆம் தேதி நாம் தமிழர் கட்சி இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.