மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் மருத்துவமனையில் அனுமதி

umionhealthminister rameshpokriyal
By Irumporai Jun 01, 2021 09:09 AM GMT
Report

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் உடல்நலக்குறைவு காரணமாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று உறுதியானது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அவர், தொற்றிலிருந்து மீண்டு தனது பணிகளை தொடர்ந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற   புதிய கல்விக்கொள்கை குறித்த ஆலோசனை கூட்டங்களில்பங்கேற்றார்.

இந்த நிலையில் இன்று (ஜூன் 1) உடல்நலக்குறைவு காரணமாக ரமேஷ் பொக்ரியால் டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனா  தொற்றுக்கு பிந்தைய பாதிப்பால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.