மருத்துவமனையில் டி.டி.வி. தினகரன் : அதிர்ச்சியில் கட்சியினர்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அமமுக பொதுச்செயலாளராக இருப்பவர் டி.டி.வி. தினகரன்.
டிடிவி தினகரனுக்கு உடல் நலக் குறைப்பாடு
இவர் கட்சி நிர்வாகிகளின் இல்ல விழாக்களில் கலந்து கொள்வதற்காக கடந்த சில நாட்களாக தஞ்சாவூரில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ளார். இந்தநிலையில் நேற்று மதியம் முதலே மிகவும் சோர்வாக காணப்பட்டதாக கூறப்படுகிறது .

இந்த நிலையில் அவர் தொடர்ந்து வாந்தி எடுத்துள்ளார். இதனையடுத்து அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனை ஒன்றிற்கு அவரது கட்சி நிர்வாகிகள் அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், உணவு உட்கொண்டதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.
நான் நன்றாக உள்ளேன்
இதனையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவர்கள், அவர் உடல்நலனுடன் இருப்பதாகவும், விரைவில் அவர் வீடு திரும்பி விடுவார் என தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி அமமுக கட்சியினரிடையே சோகத்தை ஏற்படுத்திய நிலையில் டிடிவி தினகரன் தனது ட்விட்டர் பக்கத்தில் , சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன்.
சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். 1/2
— TTV Dhinakaran (@TTVDhinakaran) September 2, 2022
மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் பரபரப்பு! அகற்றப்பட்ட புத்தர் சிலை: காலவல்துறையினரின் கன்னத்தில் அறைந்த பிக்கு IBC Tamil