மாணவர்களுக்கு குட் நியூஸ் - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!
பட்ஜெட் மீதான விவாதம் தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்றது.பல்வேறு துறை சார்ந்த அறிவிப்புகளை துறை அமைச்சர்கள் வெளியிட்டனர்.
மேலும் எதிர்க்கட்சியினர் எழுப்பிய கேள்விகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினே நேரடியாக பதில் அளித்தார். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் ரத்து செய்யப்பட்டது குறித்து எஸ்.பி.வேலுமணி கேள்வி எழுப்பினார்.
அவரின் கேள்விக்கு பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமண உதவி திட்டத்தில் பலர் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக சிஏஜி அறிக்கையில் தெரியவந்துள்ளதாக தெரிவித்தார்.
பெண்களுக்கு கல்வி தான் நிரந்தர சொத்து அதனால் தான் திருமண உதவித் திட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றார்.
திருமணம் என்ற தகுதிக்கு முன்னாள் கல்வி என்ற நிரந்தர சொத்து வேண்டும். சமூக நிதி, பெண் கல்வி, வெளிப்படைத்தன்மை அடிப்படையில் திட்டம் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் பெண்ணுரிமை என்ற அடிப்படையில் திருமண உதவி திட்டத்தை மாற்றியமைத்துள்ளோம் என்றார். இந்நிலையில் தமிழ்நாட்டில் பள்ளிகளில் உடற்கல்வி பாட வேளைக்கு அனுமதி வழங்கி பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிகளிலர் 6-9ம் வகுப்ப வரை மட்டுமே விளையாட்டு மைதானத்தில் உடற்கல்வி வகுப்புகளை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.
கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி உடற்பயிற்சி வகுப்புகளை நடத்த பள்ளிக்கல்வி ஆணையர் அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளார்.