அந்த ஆசிரியருக்கு தூக்கு தண்டனையே கொடுக்கலாம் ..ஆனால் நிர்வாகத்தை குறை கூறுவது உள்நோக்கம் கொண்டது : ஹெச் ராஜா பேட்டி!
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியருக்கு தண்டனையே கொடுக்கலாம் என பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியுள்ளார்
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த ஹெச்.ராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் தந்தை குறித்த விமர்சனத்திற்கு பதில் கூறினார்.
அதில், சிவகார்திகேயனுக்கும் எனக்கும் எந்தவித விரோதமும் இல்லை. அவரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டுமென்று நான் பேசவில்லை எனகூறினார்.

மேலும் தான் செய்தியாளர்களை சந்திக்கும்போது யாரையும் அவதூறாகவோ, தவறுதலாக பேசியதே கிடையாது என்றும், தான் வாழ்க்கையில் எந்த ஜாதியை பற்றியும், தரக்குறைவாகவும், தவறுதலாகவும் பேசியதில்லை என்றார்.
பாலியல் வழக்கில் சிக்கியுள்ள பத்மா சேஷாத்திரி பள்ளி குறித்து கருத்து தெரிவித்த ஹெச் ராஜா.
பள்ளி ஆசிரியருக்கு அதிகபட்ச தண்டனையாக தூக்கிலேயே போடலாம் ஆனால் நிரவாகத்தை குறை கூறுவது உள்நோக்கம் கொண்டது என கூறினார்.