அதிமுக பொதுக்குழு வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
ADMK
Edappadi K. Palaniswami
O. Panneerselvam
By Thahir
அதிமுக பொதுக்குழுவிற்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை ஒத்திவைப்பு
இந்த வழக்கின் விசாரணை இன்று வந்தது.இன்று இந்த வழக்கு குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி தொடரப்பட்ட வழக்கில் புதன்கிழமை 2.15 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த வழக்கில் வாதங்களை முன் வைக்க டெல்லியிலிருந்து மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ண குமார் வாதட உள்ளதால் வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறு ஓபிஎஸ் தரப்பு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து ஓபிஎஸ் தரப்பின் கோரிக்கையை ஏற்று நீதிபதி ஜெயசந்திரன் வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தார்.
நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க மக்கள் அளித்த ஆணை : அரசுக்கு நினைவுபடுத்தும் எதிரணி எம்.பி IBC Tamil
தண்ணீரிலேயே வாழும் நிலைக்கு தள்ளப்பட்ட சிறுவன்: வைரல் வீடியோவை பார்த்து உதவிய அனந்த் அம்பானி Manithan