எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளி- நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு...!

India
By Nandhini Feb 03, 2023 07:36 AM GMT
Report

இன்று நாடாளுமன்ற எதிர்க்கட்சிகள் மீண்டும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு

நாடாளுமன்றத்தில் 2023-24ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி குடியரசுத் தலைவர் திரௌபதி உரையுடன் தொடங்கியது.

இதனையடுத்து, நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் 2023-24ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். நேற்று காலை பாராளுமன்ற மக்களவை தொடங்கியபோது எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

மேலும், அதானி குழுமத்தின் சரிவு குறித்து விவாதிக்கவும் கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் பாராளுமன்றத்தில் இரு அவைகளிலும் கூட்டம் தொடங்கியபோது, மீண்டும் அதானி குழும விவகாரம் தொடர்பாக, எதிர்க்கட்சி உறுப்பினர்களின் முழக்கத்தால் மக்களவை 2 மணி வரையிலும், மாநிலங்களவை 2.30 மணி வரையிலும் ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது.   

adjournment-of-both-houses-of-parliament

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23 Evening