ஜெயலலிதா வீடு கையகப்படுத்தியதை எதிர்த்த வழக்கு ஒத்திவைப்பு

dmk amma aiadmk jayalalithaa
By Jon Apr 03, 2021 01:11 PM GMT
Report

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் தொடர்பாக தீபக், தீபா தொடர்ந்த வழக்கில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம். அந்த வழக்கில் தீபா, ஜெயலலிதா வாரிசான தன்னிடம் ஆலோசிக்காமல் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் எந்தவொரு ஒப்புதலும் இல்லாதபோது ரூ.67.90 கோடி இழப்பீடு நிர்ணயித்தது சட்டவிரோதம் என ஜெ.தீபா தனது வாதத்தை முன்வைத்தார். இதற்கு பதிலாக அரசு தரப்பிடமிருந்து, பல்வேறு பிரச்சினைகளை ஜெயலலிதா எதிர்கொண்டபோது, தீபா, தீபக் ஆகியோர் உறுதுணையாக இல்லை என்றும், தற்போது எப்படி உரிமைக்கு கோர முடியும் எனவும் கேட்டுள்ளனர்.


Gallery