மனிதகுலத்தின் மாபெரும் சாதனை - அசத்திய இந்தியா..! ஆதித்யா எல்1 படைத்த சரித்திரம்..!

Narendra Modi Indian Space Research Organisation ISRO Aditya-L1
By Karthick Jan 06, 2024 11:18 AM GMT
Report

ஆதித்யா எல் 1 லெக்ராஞ்சியன் புள்ளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

ஆதித்யா எல் 1

சூரியனின் வெளிப்புறத்தை குறித்த ஆராய்ச்சிக்காக இந்தியாவில் இருந்து கடந்த செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி ஆதித்யா எல் 1 என்ற விண்கலம் விண்ணில் எவ்வப்பட்டது.

aditya-l1-creates-historical-record-as-reaches-l1

இந்த விண்கலம், சுமார் 127 நாட்கள் பயணத்திற்கு பின்னர் இன்று அதன் புள்ளியான லெக்ராஞ்சியன் என்னும் இடத்தில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

பிரதமர் பாராட்டு

இந்நிலையில், இது குறித்து இந்திய பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், இந்தியா மற்றொரு அடையாளத்தை உருவாக்குகிறது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான ஆதித்யா-எல்1 அதன் இலக்கை அடைந்தது.மிகவும் சிக்கலான மற்றும் சிக்கலான விண்வெளிப் பயணங்களை உணர்ந்து கொள்வதில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத அர்ப்பணிப்புக்கு இது ஒரு சான்றாகும்.

இந்த அசாதாரண சாதனையை நாட்டு மக்களுடன் இணைந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகளைத் தொடர்ந்து தொடர்வோம். சூரியனை ஆராயும் நோக்கில் விண்ணிற்கு செலுத்தப்பட்ட இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின், ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாக எல்1 எனப்படும் லெக்ராஞ்சியன் புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் புதிய சாதனையை படைத்துள்ளது.