ரஜினியை சந்தித்த ஷங்க ர் மகள் : அப்ப அடுத்த திட்டம் அதுதானா?

rajinikanth aditishankar
By Petchi Avudaiappan Sep 11, 2021 04:28 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in பிரபலங்கள்
Report

இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றுள்ளார். 

தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படும் இயக்குநர் ஷங்கரின் மகள் நடிகர் கார்த்தி நடிப்பில் முத்தையா இயக்கும் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார். நடிகர் சூர்யா தயாரிக்கும் இப்படத்தின் அறிமுக போஸ்டர் பெரும் வரவேற்பை பெற்றது. 

இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18 ஆம் தேதி முதல் தேனியில் நடைபெறவுள்ளது. இயக்குநர் ஷங்கரின் மகள் நாயகியாக அறிவிக்கப்பட்ட அன்று பல்வேறு திரையுலக பிரபலங்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். மேலும் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் நடிக்கும் படத்தின் பூஜையிலும் அதிதி மாடர்ன் உடையில் கலந்து கொண்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். 

இந்நிலையில் தற்போது ரஜினியை நேரில் சந்தித்து அதிதி ஆசி பெற்றுள்ளார். இதன் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், விசேஷ நாளான விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, தலைவர் ரஜினிகாந்த் சாரைச் சந்தித்து அவரிடம் ஆசி பெற்றேன் என்று தெரிவித்துள்ளார்.

இதனைப் பார்த்த பலரும் ரஜினியின் அடுத்தப்படத்தில் அதிதி நடிக்க வாய்ப்புள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.