“சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

mk stalin cm stalin
By Fathima Sep 08, 2021 07:57 AM GMT
Report

சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் 110 விதியின் கீழ் பேசிய போது, “திமுக ஆட்சி ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாடுபடும் அரசாக விளங்குகிறது; சாதியால் புறக்கணிக்கப்பட்டவர்களை அன்பால் அரவணைப்போம்.

மாநில அளவில் ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர்களின் பிரச்னைகளை தீர்க்க நல ஆணையம் அமைக்கப்படும். மாநில அளவில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் தன்னாட்சி அதிகாரத்துடன் உருவாக்கப்படும். 

மாநில அளவில் ஆதிதிராவிடர் நல ஆணையம் உருவாக்க தனிச் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும்.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பதிவான வழக்குகளை விரைந்து விசாரிக்க 4 கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் ” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சாதியை ஒழிப்பதற்கு முன்னுதாரணமாக இருக்கும் கிராமத்திற்கு ரூ.10 லட்சம் சிறப்புத் தொகை பரிசாக வழங்கப்படும்” என்றார்.