தோனியை சீண்டிய கொல்கத்தா அணி - ஓடவிட்ட ரவீந்திர ஜடேஜா

msdhoni ipl2022 Ashestest R Jadeja
By Petchi Avudaiappan Jan 10, 2022 06:52 PM GMT
Petchi Avudaiappan

Petchi Avudaiappan

in விளையாட்டு
Report

தோனியை கலாய்த்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி போட்ட ட்வீட்டிற்கு சிஎஸ்கே வீரர் ரவீந்திர ஜடேஜா கடும் பதிலடி கொடுத்துள்ளார். 

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 4வது டெஸ்ட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று சமனில் முடிவடைந்தது. நேற்று முன்தினம் நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறும் என்ற நிலை இருந்தது. ஆனால் இங்கிலாந்தின் 10வது விக்கெட்டில் வீரர்கள் நிலைத்து நின்றனர். இதனால் கடைசி பந்தில் ஒரு விக்கெட் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி,, இல்லையென்றால் சமன் என்ற சூழல் ஏற்பட்டது. 

அப்போது இங்கிலாந்தின் கடைசி வீரர் ஆண்டர்சனின் விக்கெட்டை எடுக்க ஆஸ்திரேலிய அணியின் அனைத்து வீரர்களும் பேட்ஸ்மேனை சுற்றி நின்றனர். இதுகுறித்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் இந்த புகைப்படத்துடன் தோனியின் புகைப்படத்தை ஒப்பிட்டு கொல்கத்தா அணி ட்வீட் ஒன்று போட்டது. 

[5TX533[

அதாவது 2016ம் ஆண்டு ஐபிஎல்-ல் கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் புனே அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. கடைசி வரை நிற்கவேண்டிய கட்டயாத்தில் இருந்த தோனிக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்த அவரை சுற்றி கம்பீர் ஃபீல்டர்களை நிற்கவைத்தார் . தோனிக்கு இப்படி ஒரு ஃபீல்ட் செட்டிங்கா என அப்போது அந்த புகைப்படம் வைரலானது.

ஆனால் தோனியின் விக்கெட் கிடைக்கவில்லை. அவர் 22 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து கடைசிவரை களத்தில் இருந்தார். இதுகுறித்து பதிவிட்டுள்ள கொல்கத்தா அணி ஆஷஸ் நிகழ்வு 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் டி20 போட்டியில் நடந்த ஒரு மாஸ்டர் ஸ்ட்ரோக் ( தப்பிக்க முடியாதவாறு தோனிக்கு விரித்த வலை) நிகழ்வை நினைவுப்படுத்துகிறது என குறிப்பிட்டிருந்தது.

இதனால் அதிருப்தியடைந்த ரவீந்திர ஜடேஜா, கேகேஆர் அணியின் ட்வீட்டிற்கு, இது ஒன்றும் மாஸ்டர் ஸ்ட்ரோக் இல்லை, வெறும் Show off ( வெட்டி விளம்பரம் தான்.. இது வேறு ஒன்றுக்கும் பயன் இல்லை) எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் தரமான பதிலடி என கொண்டாடி வருகின்றனர்.