தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 ஆம் தேதிக்கு மேல் கூடுதல் தடுப்பூசிகளை வழங்க மத்திய அரசு முடிவு
தமிழ்நாட்டிற்கு ஜூன் 15 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை கூடுதலாக தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் இரண்டாவது அலையின் தாக்கம் தொடர்ந்து குறைந்து வரும் நிதியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனிடையே தமிழ்நாட்டில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய சுகாதாரத்துறை எழுத்து பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது.
அதில் தமிழ்நாட்டை பொறுத்தவரை ஜூன் 2ஆம் தேதி வரையில் ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு உள்ளதாகவும், தற்போது தமிழ்நாட்டில் 7.24 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும் ஜூன் 15 ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரையிலான வரும் நாட்களில் 18.36 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்படும் என மத்திய அரசு கூறியுள்ளது.