மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க கூடுதல் அவகாசம் - அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு

V. Senthil Balaji Government of Tamil Nadu
By Thahir Jan 31, 2023 08:32 AM GMT
Report

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்படுவதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு 

தமிழ்நாட்டில் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என அக்டோபர் 6-ஆம் தேதி மின் வாரியம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி,நவ. 28ம் தேதி முதல் மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். இதற்காக 2,811 மின் பிரிவு அலுவலகங்களிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வுத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி,  

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை 2 கோடியே 17 லட்சம் பேர் இணைத்துள்ளதாகவும் இன்னும் 15 லட்சம் பேர் இணைக்காமல் உள்ளனர் என்றார்.

additional-time-to-link-aadhaar-number-with-eb

எத்தனை பேர் இணைக்கவில்லை?

கைத்தறியை பொறுத்தவரை 74 ஆயிரம் இணைப்புகளில் 70 ஆயிரம் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளது இன்னும் 4 ஆயிரம் இணைப்புகள் இணைக்காமல் நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

விசைத்தறியை பொறுத்தவரை 1 லட்சத்து 63 பேர்களில் 1 லட்சத்து 52 ஆயிரம் பேர் மட்டுமே ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் 9 ஆயிரம் பேர் மட்டுமே நிலுவையில் உள்ளது.

குடிசைகளை பொறுத்தவரை 9 லட்சத்து 44 ஆயிரம் பேரில் 5 லட்சத்து 11 ஆயிரம் பேர் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைத்துள்ளனர். 4 லட்சத்து 33 ஆயிரம் பேர் இணைக்காமல் உள்ளனர் இது தான் அதிகம் என்றார்.

விவசாயத்தை பொறுத்தவரை 23 லட்சத்து 28 ஆயிரம் பேரில் மொத்தம் 18 லட்சத்து 28 ஆயிரம் பேர் மின் இணைப்புடன் ஆதாரை இணைத்துள்ளனர். மேலும் 5 லட்சம் பேர் இணைக்காமல் இருப்பதாக தெரிவித்தார்.

கூடுதல் அவகாசம் அறிவிப்பு 

மீதம் இருக்க கூடிய 9 சதவீத மின் நுகர்வோர்கள் ஆதார் எண்ணுடன் மின் இணைப்பை இணைக்க பிப்ரவரி 15ம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்படுவதாக அறிவித்தார்.

பிப்ரவரி 15ம் தேதிக்குள் 2கோடியே 67 லட்சம் மின் நுகர்வோர்களும் 100 சதவீதம் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணை இணைக்கும் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

இதுவே இறுதி வாய்ப்பு எனவும் இந்த 15 நாட்களுக்குள் மின் நுகர்வோர் ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்துக் கொள்ள வேண்டும் இதற்கு மேல் கால அவகாசம் கொடுக்க முடியாது என்றார்.