ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு!

additionalrelaxation tamilnadugovernment
By Irumporai Jun 27, 2021 04:36 PM GMT
Report

தமிழக அரசின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு  நாளை முதல் அமலுக்கு  வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிக அமைப்புகளின் கோரிக்கைகளை ஏற்று கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி வகை 2ல் உள்ள 23 மாவட்டங்களுக்கு கூடுதல் தளர்வுகள் அறிவித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அறிக்கை விடுத்துள்ளார் அதன்படி:

காலை 9 மணி முதல் மாலை 7 மணிவரை துணிக்கடைகள், நகை கடைகள் 50 சதவிகித வாடிக்கையாளர்களுடன் குளிர்சாதன வசதி இன்றி செயல்பட அனுமதிக்கபடுவதாக கூறியுள்ளார்.

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு.. தமிழக அரசு அறிவிப்பு! | Additional Relaxation Tamil Nadu Government

பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்று மாறு  தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.