தீபாவளி பண்டிகையை அடுத்து கூடுதல் மெட்ரோ ரயில்கள் இயக்கம் - நிர்வாகம் அறிவிப்பு

Diwali Chennai
By Thahir Oct 20, 2022 10:21 PM GMT
Report

வரும் 24 ஆம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதையடுத்து தீபாவளிக்கு முந்தைய நாட்கள் ஏற்படும் கூட்ட நெரிசலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் கூடுதல் ரயில்களை இயக்க உள்ளதாக தெரிவித்துள்ளது.

மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு 

இது தொடர்பாக மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தீபாவளியை முன்னிட்டு, நெரிசல்மிகு நேரங்களில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், வரும் அக்டோபர் 20,21,22 ஆகிய தேதிகள் மட்டும் இரவு 10 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Additional metro trains to run after Diwali festival

மேலும், நெரிசல்மிகு நேரங்களில் கூடுதல் மெட்ரோ இரயில்கள் இயக்கப்பட்டு மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், மேற்குறிப்பிட்டுள்ள மூன்று நாட்கள் மட்டும், 5 நிமிடத்திற்கும் குறைவான இடைவெளியில் இயக்கப்படும்.

எனவே, 2022 அக்டோபர் 20,21,22 ஆகிய தேதிகளில் மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நெரிசல்மிகு நேரங்களில் பயணிகள் தங்கள் பயணத்தை திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேற்கண்ட கூடுதல் மெட்ரோ ரயில்கள் மற்றும் மெட்ரோ ரயில்கள் நீட்டிப்பு சேவைகள் 20, 21, 22 ஆகிய தேதிகளில் மட்டுமே என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.