Saturday, Jul 12, 2025

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு!

Government of Tamil Nadu
By Thahir 2 years ago
Report

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் 1000 ரூபாய் பெறுவோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு 

தமிழகத்தில் குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கடந்த செப்டம்பர் 15-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் 1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாதந்தோறும் ரூ.1000 அவரவர் வங்கி கணக்குக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மேலும் 7.36 லட்சம் பேர் சேர்ப்பு! | Addition Of 7 36 Lakhs To Women Entitlement Scheme

இதன் பின் சுமார் 11.85 லட்சம் பேர் மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்திருந்தனர். அவர்களில் தகுதியான மனுக்கள் பரிசீலிக்கப்பட்டது.

ரேசன் கடைகள் இயங்காது - அரசு அதிரடி உத்தரவு!

ரேசன் கடைகள் இயங்காது - அரசு அதிரடி உத்தரவு!

இதில் 7.35 லட்சம் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு இரண்டாம் கட்டப் பயனாளிகள் பட்டியலில் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கும் ஆயிரம் ரூபாய் இன்று வழங்கப்பட்டுள்ளதால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.