”உயிருக்கு ஆபத்து.. இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டும்” - ஆதர் பூனாவாலா பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு
சீரம் நிறுவனத்தில் தலைவர் ஆதர் பூனாவாலா தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், தனக்கு இசட் பிளஸ் பாதுகாப்பு வேண்டும் என்றும் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்தியாவில் பிரதானமாக பயன்படுத்தப்பட்டு வரும் கோவீஷீல்டு தடுப்பூசியை புனேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதன் செயல் தலைவர் ஆதர் பூனாவாலா.
தற்போது இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தி குறைவாக உள்ளதால் தட்டுப்பாடு கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மத்திய அரசு தடுப்பூசிக்கான விதிகளை தளர்த்தியது.
அதன்படி தனியார் மருத்துவமனைகளுக்கும் மாநில அரசுகளுக்கும் தடுப்பூசி நிறுவனங்கள் நேரடியாக தடுப்பூசியை விற்கலாம் என்றது.

இதனைத் தொடர்ந்து தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் அதிகரித்து. அதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. ஆதர் பூனாவாலாவுக்கு மத்திய அரசு ஓய் + பாதுகாப்பு வழங்கியது
இந்நிலையில் ஆதர் பூனாவாலா தற்போது லண்டனில் இருந்து வருகிறார். வியாபார காரணங்களுக்காக லண்டன் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனக்கு இந்தியாவில் அச்சுறுத்தல் இருப்பதாகவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து ஆதர் பூனாவாலாவுக்கு இசட் + பாதுகாப்பு வழங்கக்கோரி பம்பாய் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரம் :200 அடி பள்ளத்தாக்கில் விழுந்த இராணுவ வாகனம்: பத்து வீரர்கள் உயிரிழப்பு IBC Tamil