மோசடி குற்றச்சாட்டில் அதானி நிறுவனம் : பல கோடிகளை இழந்த நிறுவனம்
அதானி குழுமத்தின் மீது மோசடி குற்றச்சாட்டு எழுந்த நிலையில் அந்த நிறுவனத்தின் பங்குகள் ரூ 46, 00ஒ கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.
அதானி பங்குகள் சரிவு
அதானி குழுமம் பல வருடங்களாக பங்குகளை கையாளுதலில் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக ஹிண்டன்பர்க் என்ற நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து அதானி குழும நிறுவனத்தின் பங்குகள் சரிந்தது.

இழப்பில் நிறுவனம்
ஹிண்டன்பர்க் ரிசர்ச் வெளியிட்ட இந்த அறிக்கையை அடுத்து அதானி டோட்டல் கேஸ், அதானி எண்டர்பிரைசஸ், அதானி டிரான்ஸ்மிஷன், அதானி கிரீன் எனர்ஜி, அதானி போர்ட்ஸ் & சிறப்பு பொருளாதார மண்டலம், அதானி பவர் மற்றும் அதானி வில்மர் ஆகியவற்றின் பங்குகள் சுமார் 4 சதவீதம் வரை குறைந்து வர்த்தகம் செய்யப்பட்டது.
அதன்படி அதானி குழுமத்தின் ஏழு பங்குகள் சந்தை மதிப்பில் ரூ.46,086 கோடியை இழந்துள்ளன. அதானி டோட்டல் கேஸ் ரூ.12,366 கோடியையும், அதானி போர்ட்ஸ் ரூ.8,342 கோடியையும், அதானி டிரான்ஸ்மிஷன் ரூ.8,039 கோடியையும் இழந்துள்ளன.