ரூ.73,250 கோடியை ஒரே நாளில் இழந்த அதானி. என்ன நடந்தது?

India BJP Modi Adani
By mohanelango Jun 15, 2021 05:01 AM GMT
Report

இந்தியாவின் அதானி குழுமத்தின் சொத்து மதிப்பு கடந்த ஏழு ஆண்டுகளில் அபரிவிதமான வளர்ச்சியை சந்தித்துள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த ஓர் ஆண்டு காலத்தில் அதானி சொத்து மதிப்பு பன்மடங்கு உயர்ந்துள்ளது.

இந்நிலையில் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் ஒரு மணி நேரத்தில் ரூ.73,250 கோடியை அதானி இழந்துள்ளார்.

அதானியின் கிரீன் எனர்ஜி, டிரான்ஸ்மிஷன், எரிவாயு உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள அல்புலா இன்வெஸ்ட்மென்ட் பண்ட், கிரெஸ்டா பண்ட், ஏபிஎம்எஸ் இன்வெஸ்ட்மென்ட் பண்ட் ஆகிய வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் 43,500 கோடி மதிப்பிலான கணக்குகளை தேசிய பிணையம் வைப்பக நிறுவனம் முடக்கியது.

தேசிய பங்கு சந்தையில் முந்தைய நாள் வர்த்தக முடிவில் 1601.60ஆக இருந்த பங்கின் விலை நேற்று 91 குறைந்து, 1,510.35 ஆக சரிந்தது. இதனால் அதானி சொத்து மதிப்பில் ரூ.73,250 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது .

இதன் காரணமாக, அதானி, ஆசியாவின் 2 வது பெரும் பணக்காரர் என்ற அந்தஸ்தை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

ஆசியாவின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் குஜராத்தை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி 2வது இடத்தில் உள்ளார் . இவரது தனிப்பட்ட சொத்து மதிப்பு 5.64 லட்சம் கோடியாகவும், அதானி குழுமங்களின் மொத்த சொத்து மதிப்பு 9.5 லட்சம் கோடியாகவும் உள்ளது .