அதானி விவகாரங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Smt Nirmala Sitharaman Gautam Adani
By Irumporai Feb 05, 2023 04:06 AM GMT
Report

அதானி விவகாரத்தில் நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையை செய்யும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அதானி விவகாரம்

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு மத்திய நிதி அமைச்சரும் பெரு நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சருமான நிர்மலா சீதாராமன் மும்பையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்

 அப்போது, பங்குச் சந்தையில் இருந்து ரூ. 20 ஆயிரம் கோடிக்கான FPO (follow-on public offers) பங்குகளை திரும்பப் பெறுவதாகவும், முதலீட்டாளர்களிடமே அவர்களின் நிதி திரும்ப ஒப்படைக்கப்படும் என்றும் கவுதம் அதானி கூறி இருப்பதால், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதானி விவகாரங்கள் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் | Adani Issue Nirmala Sitharaman Define

நிர்மலாசீதாராமன் விளக்கம்

இதற்கு பதில் அளித்த நிர்மலா சீதாராமன், இந்தியாவின் பெரும் நிதி கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது. FPO பங்குகள் திரும்பப் பெறப்படும் என்ற அறிவிப்பால் இந்திய பொருளாதாரத்தின் மதிப்பு பாதிக்கப்படவில்லை.

கடந்த 2 நாட்களில் மட்டும் 8 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் வந்துள்ளன. அதானி விவகாரத்தில், நிதி கண்காணிப்பு அமைப்புகள் தங்கள் கடமையைச் செய்யும். பங்குச் சந்தைகள் மற்றும் பரிவர்த்தனை வாரியமான செபி, சந்தையின் உறுதித் தன்மையை பாதுகாக்கும் திறனைக் கொண்டுள்ளதாக நிதியமைச்சர் கூறினார்.